¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
> “இசைமணி”யூசூப் காலமானார்!
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
* நண்பர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் இமதா தாஜுத்தீன்
சற்று முன் போன் செய்தார்,
இசைமணி நம்மை விட்டு போய் விட்டார் என்று!
* நாகூரை பிறப்பிடமாகக் கொண்டவர், முறையாக சங்கீதம் பயின்றவர், வானொலி, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பாடியவர், இசை மணி யூசூப்!
* மருத்துவர் ஐயா, ராமதாஸ் வருடந்தோறும் நடத்தும் “பண்ணிசை” விழாவிற்கு இசைமணியை அழைத்து பாடச் செய்வார்!
* எனக்கு போன் செய்து அழைப்பார், பார்வையாளராக கலந்து கொள்வேன்!
* நிகழ்வு குறித்து எழுதுவேன்!
* அடிக்கடி போன் செய்து நீண்ட நேரம் பேசுவார், தள்ளாமையால் கடந்த பத்தாண்டுகளாக பேசவில்லை!
* கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ரசூல் மொஹிதீன் அவர்களோடு சென்று சந்தித்து வந்தேன்!
* உணவு உண்டே செல்ல வேண்டுமென விருந்தோம்பல் செய்தார்!
* அன்னார் இறையடி சேர்ந்து விட்டார், மறுமை பேறுக்கு வேண்டுவோம்…..
> முகவரி: சென்னை, பல்லாவரம், தர்கா காலணி, இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்!
* படத்தில் நடுவில் இசைமணி யூசூப்! இடது இரசூலார், வலது யான்!
– சோதுகுடியான் : 18/11/2021