“இசைமணி”யூசூப் காலமானார்! – Sothugudiyan

¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ > “இசைமணி”யூசூப் காலமானார்! ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ * நண்பர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் இமதா தாஜுத்தீன் சற்று முன் போன் செய்தார், இசைமணி நம்மை விட்டு போய் விட்டார் என்று! * நாகூரை பிறப்பிடமாகக் கொண்டவர், முறையாக சங்கீதம் பயின்றவர், வானொலி, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பாடியவர், இசை மணி யூசூப்! * மருத்துவர் ஐயா, ராமதாஸ் வருடந்தோறும் நடத்தும் “பண்ணிசை” விழாவிற்கு இசைமணியை அழைத்து பாடச் செய்வார்! * எனக்கு போன் செய்து அழைப்பார், […]

ஒலிப்பதை நிறுத்திக்கொண்ட இசைமணி. கவிஞர் நாகூர் காதர் ஒலி

ஒலிப்பதை நிறுத்திக்கொண்ட இசைமணி. உலக தமிழ் இஸ்லாமிய இன்னிசை ரசிக பெரு மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இசைமணி யூசுப் அவர்கள் 18 நவம்பர் 2021 அன்று இறை நாட்டப்படி வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மரணத்திற்கு இசைமுரசு இணைய வானொலி இரங்கல் செய்தி அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் நினைவை இன்று மாலை 7 மணிக்கு மூத்த கவிஞர் “நாகூர் காதர் ஒலி” அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். Article Link : https://m.facebook.com/story.php?story_fbid=2202965396508748&id=100003859272912&sfnsn=wiwspwa

அப்துல் கையூம் – இன்றைய பொழுது இசைமணி யூசுப் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மனம் கனத்தது.

இன்றைய பொழுது இசைமணி யூசுப் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மனம் கனத்தது. நான் சென்னையில் படித்த பள்ளிக்கூடத்தில் சில காலம் எங்களுக்கு இசை ஆசானாக இருந்தார். நாகூரை பூர்விகமாக கொண்ட இவர் வசித்து வந்தது சென்னை , பல்லாவரத்தில். கர்னாடக இசையுலகில் ஜாம்பாவானாக போற்றப்பட வேண்டியவர். குறிப்பாக இஸ்லாமியப் பாடல்களை கர்னாடக இசையில் பாடி முன்னோடியாகத் திகழ்ந்த நாகூர் தர்கா வித்வான் இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதருக்கு அடுத்தபடியாக இசையுலகில் முத்திரை பதித்தவர் இவர். இசைவாணர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களால் உருவாக்கப்பட்ட […]

Nagore Rumi – மாமாவை எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமை வாழ்வில் கண்ணியப்படுத்துவானாக, ஆமீன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். இசைமணி யூசுஃப் மாமா அவர்கள் இன்று அதிகாலை வஃபாத் ஆகிவிட்டதாக நண்பர் நூர்சாதிக் தகவல் அனுப்பினார். இறைவன் அவர்களைத் தன் கருணையினால் பொருந்திக்கொள்வானாக, ஆமீன். கொஞ்ச நாளைக்கு முன்புதான் நண்பர் நூர் சாதிக்கின் அழைப்பின் பேரில் நானும் யுகபாரதியும் நூர் சாதிக்கும் இசைமணி அவர்கள் வீட்டுக்குச்சென்று பார்த்து வந்தோம். பேசிக்கொண்டே இருந்தார்கள். அபாரமான நினைவாற்றல். என்னைப் பார்த்ததும் நாகூர் ரூமி என்று அழைத்துப் பேசினார்கள். ரொம்ப நேரம் பேசிக்கொண்டே […]

Aloor Sha Navas – MLA, Nagapattinam Constituency. Politician, Activist, Orator from Tamil Nadu, India

கலை இலக்கிய ஆளுமைகளை அள்ளித் தந்த நாகூரில் பிறந்து, சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதரிடம் இசை பயின்று, நாகூர் தர்காவில் முதல் அரங்கேற்றம் செய்து, கர்நாடக இசையில் புலமை பெற்று, கலை வாழ்வு வாழ்ந்த இசைமணி எம்.எம்.யூசுப் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! #நாகப்பட்டினம் #நாகூர் #இசைமணி https://www.facebook.com/1767279916829957/posts/3711100419114554/?d=n