இசைமணி யூசுஃப் மாமாவோடு ஒரு நாள் – நாகூர் ரூமி

நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் மாமாவின் மகனார், என் நண்பர் நூர்சாதிக் ஃபோன் செய்தார். இசைமணி யூசுஃப் மாமாவைப் பார்க்கப் போகலாமா என்று. என் உடல்நிலை கருதி நான் கடந்த பல மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஏனெனில் எனக்குத் துணைக்கு ஒரு ஆள் வேண்டும்! அது பெரும்பாலும் மனைவிதான். ஆனாலும் போய்விட வேண்டியதுதான் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது. யுகபாரதியிடம் சொன்னேன். அவரும் போகலாம் என்றார். அவர் வீட்டுக்கு என்னை வந்துவிடச் சொன்னார். நான் […]