இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.
இசைமணி யூசுஃப் மாமா அவர்கள் இன்று அதிகாலை வஃபாத் ஆகிவிட்டதாக நண்பர் நூர்சாதிக் தகவல் அனுப்பினார்.
இறைவன் அவர்களைத் தன் கருணையினால் பொருந்திக்கொள்வானாக, ஆமீன்.
கொஞ்ச நாளைக்கு முன்புதான் நண்பர் நூர் சாதிக்கின் அழைப்பின் பேரில் நானும் யுகபாரதியும் நூர் சாதிக்கும் இசைமணி அவர்கள் வீட்டுக்குச்சென்று பார்த்து வந்தோம். பேசிக்கொண்டே இருந்தார்கள். அபாரமான நினைவாற்றல். என்னைப் பார்த்ததும் நாகூர் ரூமி என்று அழைத்துப் பேசினார்கள். ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். செல்ஃபோன் வைத்து ரெகார்ட் செய்தோம்.
என் சங்கீத ஆசான் தர்கா ஆதீன சங்கீத வித்வான் மர்ஹும் எஸ்.எம்.ஏ.காதர் மாமா அவர்களிடம் இசை பயின்றவர். சீர்காழி கோவிந்தராஜன் இசைமணிக்கு கொஞ்சம் சீனியர்.
மாமாவை எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமை வாழ்வில் கண்ணியப்படுத்துவானாக, ஆமீன்.
Nagore Rumi – A spiritualist and a writer. நாகூர் ரூமி – எழுத்தாளர்.